×

சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் மட்டும் 92.86 லட்சம் பேர் பயணம்

சென்னை, டிச.2: நவம்பர் மாதத்தில் மட்டும் 92.86 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் 92,86,753 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகளும், செப்டம்பர் 1,01,46,769 மாதத்தில் பயணிகளும், அக்டோபர் 93,27,746 மாதத்தில் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.11.2025 அன்று ஒரே நாளில் 3,60,342 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

நவம்பர் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 48,48,485 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 60,317 பயணிகள், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 43,77,951 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டிஜிட்டல், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ்ப் (83000 86000), பேடிஎம், போன்பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டண தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றை பயணத்துக்கான காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி கிடையாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai Metro Rail ,Chennai ,Metro ,Chennai Metro Rail Corporation ,
× RELATED மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட...