ெதாழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

 

நெல்லை, டிச.1: நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நாங்குநேரியை சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன் (27) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக ஒரு கும்பல் நேற்று வந்தது. அப்போது அவர்கள் மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அங்கிருந்தவர்கள் கும்பலை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  இதன்பின்னர் வேலை முடிந்து மாலையில் மகேந்திரன் நாங்குநேரி செல்வதற்காக புதிய பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்குவந்த அதே கும்பல் அவரிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசில் அவர் புகார் செய்தார்.

Related Stories: