திருத்தணியில் புயலால் பாதிப்பு இல்லை

 

திருத்தணி, டிச.1: டிட்வா புயல் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால், ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, பேரூராட்சிகள், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பாதிப்புகள் சரி செய்ய தயார் நிலையில் இருந்தனர். இருப்பினும் நேற்று அதிகாலை முதல் மாலை வரை வானம் வறண்டு காணப்பட்டது. அவ்வப்போது வெயிலும் தலை காட்டியது. மழை பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதனால், அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

 

Related Stories: