ஈரோடு, நவ. 29: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொம்மன்பட்டி வாய்க்கால் ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஒரு நபர், அரசு மதுபானத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
விசாரணையில் அவர், கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த தேவராஜ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
