சாத்தான்குளம், நவ. 29: சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் அரசியலமைப்பு நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளர் சுடலை தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பர்வதம் ராமலட்சுமி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகார்த்திகை தீபன், மாலாதேவி உள்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
- அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு விழா
- சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகம்
- சாத்தான்குளம்
- அரசியலமைப்பு நாள்
- யூனியன் கமிஷனர்
- சுதலாய்
- தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்...
