தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆண்டு விழா

தக்கலை,நவ.29: தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 52வது ஆண்டு விழா மதிப்புகளின் அடித்தளமாக ஞானத்தில் வளர்தல் என்ற கருத்தினை மையமாக வைத்து நடைபெற்றது. அமலா மறை மாநில தலைவி அருட்சகோதரி அமலோர் மேரி தலைமை வகித்தார். பள்ள தாளாளர் அருட்சகோதரி ஜெபா, தலைமை ஆசிரியர் அருட்சகோதரி லிற்றி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மேனாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டேனியல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 10,12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அருட்தந்தை வென்சஸ்லாஸ், அமலா கான்வென்ட் தலைவி புஷ்பவாணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேரி பியர்லி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அருட்சகோதரிகள் இணைந்து ஆல்மா அமலியன்ஸ் என்ற பாடலை இசைத்து வெளியிட்டனர். விழாவில் அருட்சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இந்நாள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: