×

வெந்தய டீயும் நன்மைகளும்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து, 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி தேன் சேர்த்துக் கலந்து சூடாகவோ
அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடிக்கலாம்.

* மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புகளை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயை குடித்தால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் இந்த டீயை குடிப்பது நல்லது. ஏனெனில் இந்த டீ ஹார்மோன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

* பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த டீயை குடித்தால் அது பிரசவ வலியை தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவிப் புரியும்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

* உயர் கொலஸ்ட்ரால் பிரச்னை குறைவதோடு, ரத்த சர்க்கரை அளவும் குறையும்.

* ரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். அடிக்கடி சிறுநீர் கழிக்க உதவும்.

* இதய நோயின் தாக்கத்தை தடுக்கும்.

* வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளன. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் இதை தொடர்ந்து குடித்து வரலாம்.

* உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

தொகுப்பு: தீபா, ஓசூர்.

Tags :
× RELATED ஸ்லீப் ஆப்னியாவுக்கான பிசியோதெரப்பி!