×

அடிப்படை வசதியின்றி செயல்படும் ஆதார் மையம்

ஓமலூர், நவ.28: ஓமலூர் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களுக்கு புதிய ஆதார் கார்டு, பெயர், வயது, அலைபேசி மற்றும் முகவரி திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கை குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் காலை முதல் மாலை வரை காத்திருக்கின்றனர். இந்த மையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மையத்தையொட்டி புதர் மண்டி கிடக்கிறது. எனவே, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aadhaar ,Omalur ,Omalur taluka ,
× RELATED விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது