திருக்காட்டுப்பள்ளி, நவ.27: தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் சானூரப்பட்டி கால்நடை மருந்தக வளாகத்தை சீர்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சானூரப்பட்டி கால்நடை மருந்தகம் அப்பகுதியில் உள்ள சுமார் 25 கிராம கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இங்கு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அடிக்கடி வந்து செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், கால் நடை வளாகத்தின் முன்பகுதி பள்ளமாக இருப்பதாலும், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் அங்கு மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மருந்தகத்தில் பணிபுரியும் மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மருந்தகத்திற்கு செல்லவே மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மழை நீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூதலூர் வட்டம் சானூரப்பட்டி கால்நடை மருந்தக வளாகத்தை சீர்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- பூத்தலூர் வட்டம்
- சனுராபதி கால்நடை மருந்தக வளாகம்
- திருக்காட்டுப்பள்ளி
- சனூரபட்டி கால்நடை மருந்தக வளாகம்
- தஞ்சி மாவட்டம் பூதலூர் வட்டம்
- சனுராபட்டி கால்நடை மருந்தகம்
