×

மட்டன் மக்லூபா

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
மட்டன் – 3/4 கிலோ
உருளைக்கிழங்கு – 2
கத்தரிக்காய் – 2
காலிஃபிளவர் – ஒரு கிண்ணம்
தக்காளி – 2
வெங்காயம் – 3
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் – 7
பட்டை – 1
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – 2
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
சமையல் எண்ணெய் – 2 குழிகரண்டி
பாதாம் ,முந்திரி – 6.

செய்முறை

மசாலா பொருட்கள் அனைத்தையும் வறுத்து அரைக்கவும். மட்டனை மசாலாவுடன் சேர்த்து வேக வைத்து பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுக்கவும். இது கூடுதல் சுவை கொடுக்கும். காய்கறிகளைத் தனித்தனியாக வறுக்கவும். பின்பு பிரியாணி செய்யும் பாத்திரத்தில் கீழே தக்காளி துண்டுகள், அதன் மேல் வறுத்த காய்கறிகள், அதன் மேல் மட்டன், அதன் மேல் அரிசி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நிரப்பவும். இதை மிதமான சூட்டில் மூடி வைத்து சமைக்கவும். அரிசி வெந்ததும் நெய் ஊற்றி தம் போடவும். வறுத்த பாதாம், முந்திரியையும் மேலே தூவவும். பிறகு பாத்திரத்தை ஒரு பெரிய தட்டில் தலைகீழாக மாற்றி எடுக்க வேண்டும். அதுவே “மக்லூபா”! சுவையான நம்பர் ஸ்டைல் மக்லூபா தயார்.

Tags :
× RELATED உன்னி அப்பம்