×

பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தல்: 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

பாட்னா: பீகார் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தலின் 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 243 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tags : Bihar Assembly 2nd Phase Election ,Patna ,Bihar Assembly ,
× RELATED எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற...