- போக்லைன்
- பள்ளிப்பட்டு
- யாதவேந்திரன் (எ) சின்னா
- ராமபுரம் கிராமம்
- பொத்தட்டுர்பேட்டை
- அத்திமாஞ்சேரிபேட்டை
பள்ளிப்பட்டு, நவ.11: பொதட்டூர்பேட்டை அருகே ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யாதவேந்திரன்(எ) சின்னா(49), பொக்ைலன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கல்லால் தாக்கிவிட்டு ரூ.7,400 பறித்துச் சென்றனர். இதுகுறித்து யாதவேந்திரன் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த செழியன்(28) ஹரிஷ்(25) ஆகியோரை கைது செய்தனர்.தலைமறைவான நரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
