×

தமிழ்நாட்டை SIR என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளதால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி ஆகியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘தமிழ்நாட்டை SIR என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளதால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி ஆகியுள்ளது. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்னும் சதிவலையில் சிக்காமல்மக்களை காக்க வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை

நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும்,

வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் #SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,

இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது! அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,SIR ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,K. Stalin ,X ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...