×

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று (நவ., 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தூத்துக்குடி
* ராமநாதபுரம்
* விருதுநகர்
* சிவகங்கை
* மதுரை
* தேனி
* திண்டுக்கல்
* திருச்சி
* நாமக்கல்

நாளை (நவ., 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி

நாளை மறுநாள் (நவ., 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருநெல்வேலி
* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Indian Meteorological Centre ,IMC ,Indian Ocean ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...