×

அரூரில் தக்காளி விலை உயர்வு

அரூர், நவ.7: தர்மபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளிடம் தக்காளியை கொள்முதல் செய்து சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில் இருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு, 27 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரை வாங்கப்பட்டது. தற்போது ஒரு கூடை தக்காளி ரூ.400 முதல் ரூ.500 வரை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, சில்லரையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்ததையடுத்து, விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Arur ,Gopinathampatti Koodrodu ,Bommidi ,Morappur ,Kambainallur ,Irumathur ,Odasalpatti Koodrodu ,Dharmapuri district ,Chennai ,Bengaluru ,Coimbatore ,
× RELATED வேலைக்கு சென்ற மேஸ்திரி மாயம்