வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி வகுப்பு

ஊத்தங்கரை, நவ.5: ஊத்தங்கரை(தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாக்காளர் பதிவு அலுவலரும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான சிவகுமார் தலைமை வகித்தார். உதவி வாக்காளர் பதிவு அலுவலரும், வட்டாட்சியருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். தேர்தல் வட்டாட்சியர் சக்தி, துணை வட்டாட்சியர் சகாதேவன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், குண.வசந்தரசு, மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் காந்தி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சக்ரவர்த்தி, வேடி, வேங்கன், நரேஷ்குமார், நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: