×

போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ மகன்

இஸ்தான்புல்: துருக்கியில் ஃபெடரேஷன்ஸ் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. 16 வயதுக்கு உட்பட்டோர் மோதும் இப்போட்டிகளில் நேற்று முன்தினம் போர்ச்சுகல் அணியும், துருக்கி அணியும் மோதின. இந்த போட்டியில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் கிறிஸ்டியானோ டோஸ் சான்டோஸ் (15), 90வது நிமிடத்தில் மாற்று வீரராக முதன் முதலாக விளையாடினார். இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி அபாரமாக ஆடி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.

Tags : Ronaldo ,Portugal ,Istanbul ,Federations Cup ,Turkey ,Cristiano Ronaldo ,
× RELATED இலங்கையுடன் இன்று 4வது டி.20 போட்டி:...