- திருகல்யாண உற்சவம்
- சிவசுப்பிரமணியர் கோயில்
- வந்தவாசி
- காந்த சஷ்டி விழா
- கீழ்கொடுங்களூர்
- Soorasamhara
- சிவசுப்பிரமணியர்
வந்தவாசி, அக். 29: வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் கோயிலில் கடந்த 21ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நேற்று முன்தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, நேற்று சிவசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேவி, பூதேவியுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவசுப்பிரமணியருக்கு சீர்வரிசைகளுடன் விமரிசையாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அதேபோல் வந்தவாசி ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள சண்முகநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
