×

ரூ.5 லட்சம் லஞ்சம்: பஞ்சாப் டிஐஜி கைது

அமிர்தசரஸ்: ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய போது பஞ்சாப் டிஐஜி ஹர்ச்சரன் சிங் புல்லர், சிபிஐயால் கைது செய்யப்பட்டார். புகார்தாரர் ஒரு கோரிக்கையைத் தீர்க்க புல்லர் ரூ.5 லட்சம் கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சிபிஐ சோதனை நடத்தியபோது முதல் தவணைக்காக புகார்தாரரை மொஹாலி அலுவலகத்திற்கு வரவழைத்து ரூ.5 லட்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். அவருடன் ஒரு இடைத்தரகரும் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து டிஐஜி புல்லருடன் தொடர்புடைய மூன்று இடங்களில் சோதனை நடந்தது. கைது செய்யப்பட்ட அவர் பஞ்சாப் முன்னாள் டிஜிபி மெஹல் சிங் புல்லரின் மகன் ஆவார்.

Tags : Punjab ,DIG ,Amritsar ,Harcharan Singh Bhullar ,CBI ,Bhullar ,
× RELATED ஆயுர்வேத மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய ஆந்திரப்பிரதேச மாநில அரசு அனுமதி