×

கள்ளக்குறிச்சி அருகே ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்திலுள்ள ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமம், மூப்பனார் தெருவில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் செல்வி. சௌமியா (வயது 14) என்பவர் 10.10.2025 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் பூட்டை கிராம எல்லையில் இருக்கும் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Kallakurichi ,Chennai ,MLA ,Kallakurichi district ,Sankarapuram Vatom, Bouttai village ,K. Stalin ,Sankarapuram Vatom ,Arasampattu Village ,
× RELATED உலக துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கம் வென்று அசத்தல்!