×

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு

திருத்துறைப்பூண்டி, அக்.12: தமிழ் மொழி இலக்கியத் திறனையும் மாணவர்களிடம் மேம்படுத்தும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு’ தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்படுகிறது. இத்தேர்வு வருடத்திற்கு ஒரு முறை தமிழக அளவில் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2025-26 கல்வி ஆண்டுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 5 ஆயிரத்து 331 மாணவர்கள் எழுதுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மொத்தம் 1046 மாணவர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது 12 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய், 12ம் வகுப்பு வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.

Tags : School Education Department ,Thiruthuraipundi ,Language Literary Proficiency Exam ,State Examinations Directorate ,Tamil Nadu School Education Department ,Tamil Nadu ,
× RELATED மாநகரில் மின்பராமரிப்பு பணிநாளை குடிநீர் விநியோகம் ரத்து