×

ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமில் சுற்றுச்சுவரை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

 

கரூர், அக்.10: ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் இடையே இலங்கை தமிழர் முகாம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இங்கு குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றுச்சுவரின் பெரும்பாலான பகுதிகள் சிதிலடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், சுற்றுச்சுவரோரம் செல்லும் சாக்கடை வடிகாலும் பழுதடைந்து உள்ளது.
இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, இவர்களின் நலன் கருதி சுற்றுச்சுவர் மற்றும் சாக்கடை வடிகாலை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ryanur ,Sri ,Tamil Camp ,KARUR, OCT ,RAYANUR ,LANKAN ,TAMILS ,Tamil ,Camp ,Danthonymalai Rayanur ,Karur Municipality ,
× RELATED கரூர் அரசு மருத்துவமனை அருகே...