வார இறுதி நாளில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது: போட்டிப்போட்டு வெள்ளியும் எகிறியது

சென்னை:தங்கம் விலை மாத தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.315க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,520க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.130க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.

Related Stories: