×

ஆசிய கோப்பையில் பாக். விலகல்: கிரிக்கெட்டை தொடர்ந்து ஹாக்கி; வாய்ப்பு பெற்றது வங்கம்

சென்னை: பயங்கரவாதம், எல்லையில் அத்துமீறல் போன்ற பிரச்னைகள் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே 79ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. அது அவ்வப்போது கிரிக்கெட் விளையாட்டிலும் எதிரொலிக்கும். இரு அணிகளும் மோதும் ஆட்டங்கள் உலக போரைப் போல் இருக்கும். இரு தரப்பு ரசிகர்கள் மட்டுமல்ல, வீரர்களும் ரொம்ப உணர்ச்சி வசப்படுவர். அவ்வப்போது இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் ரத்து செய்யப்படும். இப்போது பல ஆண்டுகளாக இரு அணிகளுக்கும் இடையிலான தொடர்கள் நடப்பதேயில்லை. ஆசிய, உலக கோப்பைகளில் மட்டுமே மோதுகின்றன.

இரு அணிகளும் மோதும் ஆட்டங்கள் இந்தியா, பாகிஸ்தானில் நடத்தாமல் வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவது நாளையும் தொடரும் கதையாகி விட்டது. கிரிக்கெட்டில் பிரச்னைகள் தொடர்ந்தாலும் மற்ற விளையாட்டில் இப்படி பிரச்னை எழுந்ததில்லை. அப்போதும் இந்திய அணி பாக் சென்று விளையாட ஒத்துக் கொண்டதில்லை. ஆனால் ஹாக்கி, கபடி போட்டி களில் பங்கேற்க பாக் அணி இங்கு வந்து சென்றுள்ளது. சமீப காலங்களில் ஒடிசாவில் நடந்த உலக கோப்பை, தமிழ்நாட்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகளில் பாக் உற்சாகமாக வந்து விளையாடியது.

இந்நிலையில் இம்மாதம் 29ம் தேதி பீகாரின் ராஜ்கிர் நகரில் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி தொடங்குகிறது. இந்தப்போட்டியில் நேற்று முன்தினம் வரை பாக் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் திடீரென ஆசிய கோப்பையில் பங்கேற்கப் போவதில்லை என்று பாக் அறிவித்துள்ளது. வழக்கமாக இந்தியா சொல்லும் ‘ பாதுகாப்பு காரணங்களுக்காக பாக் செல்ல முடியாது’ என்பதையே பாகிஸ்தானும் இப்போது சொல்லியுள்ளது. அதனால் பாகிஸ்தானுக்கு பதிலாக பி-பிரிவில் வங்கதேசம் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏ பிரிவில் இருந்த ஓமன் அணி விலகியதால் கஜகஸ்தான் வாய்ப்பு பெற்றது.

* தமிழ்நாடு வருமா பாக்.
உலக கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டி நவ.28 முதல் டிச.10ம் தேதி வரை சென்னை, மதுரை நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் பி பிரிவில் இந்திய அணியுடன் பாகிஸ்தானும் இடம் பெற்றுள்து. ஆசிய கோப்பை விலகலை தொடர்ந்து பாக், ஜூனியர் உலக கோப்பையில் விளையாட தமிழ்நாடு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : Pak ,Asia Cup ,Bengal ,Chennai ,India ,Pakistan ,world wars ,
× RELATED சில்லிபாயிண்ட்…