- சென்னை
- தர்மபுரி
- Nallampalli
- ராஜவேல் மகான் ராஜகுமார்
- ஆதியமங்கொட்
- நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம்
- அபிநயா
நல்லம்பள்ளி: தர்மபுரி அருகே, கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜவேல் மகன் ராஜ்குமார் (27). கட்டிட தொழிலாளியான இவருக்கு அபிநயா (23) என்ற மனைவியும், 6 வயதில் மகளும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் தாமோதரன்(32). போலீஸ்காரரான இவர், சென்னையில் பணியாற்றி வருகிறார்.
அதியமான்கோட்டையில் மாரியம்மன் கோயில் விழா நடைபெற்று வருகிறது. நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவை தொடர்ந்து, இரவு ஆடல் -பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்குள்ள ஏரிக்கரை பக்கமாக சென்ற ராஜ்குமாருக்கும், அவ்வழியாக வந்த தாமோதரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தாமோதரன் கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து, ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து தாமோதரனை கைது செய்தனர். முன்விரோத தகராறில் கொலை நடைபெற்றதா அல்லது பெண் விவகாரத்தில் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. கோயில் விழாவில், தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.
