- அமைங்கரை
- சென்னை
- விபச்சாரத் தடுப்புப் பிரிவு
- ஐயவு நாயுடு காலனி
- உதவி ஆணையாளர்
- யாஸ்மினி
- இன்ஸ்பெக்டர்
- ராஜலட்சுமி…
சென்னை: அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அதன்பேரில், உதவி கமிஷனர் யாஸ்மினி உத்தரவுப்படி விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டியன் (33) என்பவர், தனது தோழிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம்பெண் மற்றும் ஒரு ெசல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜான் கிறிஸ்டியான் மாமல்லபுரம் பகுதியில் பணியாற்றும் இளம்பெண்களை தனது தோழிகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் என்று பேரம் பேசி வரவழைத்து, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவருக்கு இளம்பெண்களை பிடித்து கொடுத்த புரோக்கரை தேடி வருகின்றனர்.
