×

ஊராட்சிகளில் சுதந்திர தின கிராம சபை

ஈரோடு, ஆக. 14: ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான நாளை (15ம் தேதி) காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவின அறிக்கை (1-4-2025 முதல் 31-7-2025 வரை) குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 2025-26ம் ஆண்டுக்கான ஜூலை 31ம் தேதி வரையிலான பணிகள் முன்னேற்றம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2ன் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளின் குறித்த விவரத்தினை உறுதி செய்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டனர் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Independence Day ,Gram Sabha ,Panchayats ,Erode ,Erode district ,
× RELATED குறைதீர்க்கும் கூட்டத்தில் 225...