×

தமிழக-கர்நாடக எல்லையில் குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானைகள்

சத்தியமங்கலம்,ஆக.13: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். நேற்று மதியம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் தனது 3 குட்டிகளுடன் மெதுவாக சாலையை கடந்து சென்றன.

அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பீதியடைந்து வகானத்தை சாலையோரமான நிறுத்தினர். அதில் ஒருசிலர் யானையை கடந்து செல்லும் காட்சியை தங்களது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். வனப்பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சாலையை கடந்து சென்ற காட்டு யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. பகல் நேரங்களில் வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் கடந்து செல்வதால் வாகனங்களில் செல்வோர் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags : Tamil Nadu-Karnataka border ,Sathyamangalam ,Sathyamangalam- ,Mysore National Highway ,Tamil Nadu ,Karnataka ,Sathyamangalam Tiger Reserve forest ,Karapallam forest ,Tamil Nadu-Karnataka ,Sathyamangalam… ,
× RELATED குறைதீர்க்கும் கூட்டத்தில் 225...