- வி.கே.சி
- ஈரோடு
- தமிழகத்தின் விடுதலைப் புலிகள்
- ஈரோடு சூரம்பட்டி நால் சாலை
- ஈரோடு மாநகர் மாவட்டம்
- சாதிக்
- வடக்கு மாவட்டம்
- ஈஸ்வரன்
- தெற்கு மாவட்டம்...
ஈரோடு, ஆக. 13: ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஆணவக்கொலையை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்றக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன் பங்கேற்று பேசினார்.
ஆணவக்கொலையை தடுக்க சிறப்பு சட்டத்தை ஒன்றிய அரசும், தமிழக அரசும் இயற்றக்கோரி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நகல்களை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். இதில், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் அம்ஜத்கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, நிர்வாகிகள் மணிமேகலை, சாபிரா பானு, அக்பர் அலி, சவுமியா, நாகராஜ், ராஜா முகமது, குணவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
