- ஈரோடு
- ஈரோடு தாலுகா
- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டம்
- ஜனாதிபதி
- விஜயராகவன்
- தாலுகா
- நாகராஜன்…
ஈரோடு, ஆக.13: இலவச வீட்டு மனை பட்டா கோரி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் மற்றும் தாலுகா செயலாளர் நாகராஜன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் திரண்டு மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், துணை தாசில்தாரிடம் மனு வழங்கினர்.
பின்னர், மாவட்ட தலைவர் விஜயராகவன் கூறியதாவது: ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட எலவமலை, மேட்டு நாசுவம்பாளையம், பவானி தாலுகா லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம், அந்தியூர் தாலுகா பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் அதிகளவில் விவசாய தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீடு, வீட்டு மனைகள் இல்லை. தினக்கூலிகளாக பணி செய்வதால், நிலம் வாங்கி வீடு கட்டும் அளவுக்கு வசதி இல்லை.
எனவே, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 240க்கும் மேற்பட்டோர் தனித்தனியாகவும், கூட்டாகவும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடமும் மனு வழங்கியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக தாசில்தாரிடம் மனு வழங்கியுள்ளோம். அதிகாரியும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
