×

போதைப் பொருள் விற்பவர்கள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம்

ஈரோடு, ஆக. 11: ஈரோடு மாவட்டத்தில், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே எடுத்துக் கூறி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தினர். மேலும் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கும் இது குறித்து விளக்கப்பட்டது.

பேனர்கள், துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. போதை இல்லா தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் இதுவரை போலீசார் 690 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 294.915 கிலோ கஞ்சா மற்றும் 1,427 போதை மாத்திரைகள் 4,246.260 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 33 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 424 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தவிர முக்கிய குற்றவாளிகள் பிரிவு 14 கீழ் 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 9442900373 என்ற வாட்ஸ் ஆப் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் போதைப்பொருகள் விற்பனை குறித்து அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags : WhatsApp ,Erode ,Prohibition Enforcement Division ,
× RELATED குறைதீர்க்கும் கூட்டத்தில் 225...