×

செஞ்சி ஊராட்சியில் ‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சியில், ‘’உங்களுடன் ஸ்டாலின்’’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு துணை ஆட்சியர் உஷாராணி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ந.ரஜினிகாந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) சௌந்தரி, (கி.ஊ.) நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, துணை வட்டாட்சியர் ஆதீஸ்வரன், வருவாய்ஆய்வாளர்கள் கோபிஷாலினி, கிராம நிர்வாக அலுவலர் சுடலை குமார் முன்னிலை வகித்தனர்.

இதில், திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களையும், குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த முகாமில் திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், ஒன்றிய செயலாளர்கள் கே.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், மாஸ்டர் குருதாஸ், மாவட்ட அமைப்பாளர் வி.எஸ்.நேதாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி ராஜி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் செஞ்சி டி.ராஜி பிரகாஷ், பிரசன்னகுமார், வாசு, சங்கர், திலீப்குமார், மந்தவெளியான், கிளை செயலாளர்கள் ரஞ்சன், முனுசாமி, மணி, மதி, தாமோதரன், செஞ்சி தர், சேகர் கலந்துகொண்டனர்.

 

Tags : Stalin ,Senchi panchayat ,Thiruvallur ,Kadambattur ,Tiruvallur ,Deputy Collector ,Usharani ,Tahsildar N. Rajinikanth ,Development Officers ,V.U. ,Soundarya ,K.U.) Natarajan ,Deputy ,Block Development Officer ,Bhuvaneswari ,Tahsildar Atheeswaran ,Revenue Inspector ,Gopishalini ,Village Administrative Officer ,Sudalai Kumar ,Thiruvallur Constituency ,MLA ,V.G. Rajendran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...